fake

Mobile no.

Msg:

Friday

பிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா?

Posted by Unknown


நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் நிறுவனங்களின் பெயர்கள் உலகளவில் பிரபலமாக இருக்கும் .அதன் பெயர்  காரணங்களினாலே சந்தையில் அதன் அனைத்து பொருட்களின்  மதிப்பும் உயர்ந்தே இருக்கும். அது போன்ற நிறுவனங்களின் பெயர் காரணங்களை இப்பொழுது பார்ப்போம்.

 


௦01.கேனன் ( CANON ) :






 
மிகவும் பிரபலமான இந்நிறுவனத்தின் ஆரம்பக்கால பெயர் பிரிசிசன் ஆப்டிகல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்  லேபரட்டரி என்பதாகும். இந்நிறுவனமானது  புகைப்படக் கருவி(CAMERA ) தயாரிப்பில் சிறந்த நிறுவனமாகும்.இவைத்தான் ஜப்பான் நாட்டில் முதல் முதலாக 35மிமீ  போகல் பிளேன்  ஷட்டர் கேமராவினைத்  தயாரித்து வெளியிட்டனர் .அந்த கேமராவின் பெயர்  க்வானன் (KWAN NON ) என்பதாகும். ஜப்பானிய  மொழியில் புத்தருடைய போதி   தத்துவ கருணை  என்ற பொருள் தரும் இதனையே சிறிதுக்காலம் கழித்து சிறிய மாற்றம் செய்து கேனன் (CANON) என்ற பெயரினை இந்நிறுவனத்திற்கு வைக்கப்பட்டது.



02. ஹிடாச்சி  (HITACHI )










இந்நிறுவனம் எலக்ட்ரானிக் துறையில் புகழ் பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் தொலைக்காட்சி பெட்டி ,ஸ்கேனர் ,குளிர்சாதனப்  பெட்டி, ஏ.சி மற்றும் கணினி பாகங்கள்  என இதன் சந்தைப்பொருட்களின்  பட்டியல் நீண்டுகொண்டே போகும்.



ஜப்பான் மொழியில் ஹிடாச்சி என்பது சூரிய உதயம் என்ற பொருளினை தருகின்றது. இந்நாடு சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுவதால் இந்நிறுவனத்தின் பெயரையும் அதனை சார்ந்தே வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஜப்பானியர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் குறிக்கும் வகையில் இந்நிறுவனம் ஹிடாச்சி என பெயர் சூட்டியுள்ளனர்.



03.அகாய்  ( AKAI )



பொதுவாக ஜப்பான் நிறுவன தயாரிப்புக்களில்  பெரும்பாலும்  எலக்ட்ரானிக் வகையான பொருளாகத்தான் இருக்கும். அதன் வரிசையில் இந்த இந்நிறுவனமும் பிரபலமான எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து உலகம்  முழுவதும் சந்தையிட்டுள்ளது. இதன் பெயர்க்  காரணத்தை இப்பொழுது காணலாம்.






அகாய் என்றால் ஜப்பானிய மொழியில் சிகப்பு வண்ணத்தை குறிக்கும் சொல்லாகும். சூரிய உதயத்தின் போது ஏற்படும் சிகப்பு வண்ணமானது இந்நாட்டின் அனைத்து இடத்திலும் இடம்பெறுகிறது. இந்நாட்டின் தேசிய கொடியின் மையப்ப் பகுதியில் இந்த சிகப்பு வண்ணத்தை குறிக்கும் வகையில் தான் சிகப்பு நிற  வட்டம் இடம்பெற்றுள்ளது.மேலே கூறியதுபோல் ஜப்பான் சூரியன் உதிக்கும் நாடு என அழைக்கப்படுகிறது ,ஏனெனில் உலகின் கிழக்கு மூலையில் உள்ள நாடு ஜப்பான் . எனவே இந்த சிகப்பு நிறத்தை குறிக்கும் வகையிலேயே இப்பெயரினை இந்நிறுவனத்துக்கு வைத்துள்ளனர்.



04. கேசியோ ( CASIO ) :








இந்நிறுவனமும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முதன்மை பெற்று விளங்குகின்றது. மேலும் இந்நிறுவனம் தொழிற்சாலை உபகரணங்களை வடிவமைப்பதினை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டது. இவை பல வகையான எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் கணிப்பான் (Calculator), இசை விசைப்பலகை (Music Keyboard) மற்றும் அழகிய கைக்கடிகாரம் (Watches) போன்றவை ஓயரபலமானவை ஆகும்.



இந்நிறுவனத்தை  டடாயோ கஷியோ    என்பவர்த்தான் நிறுவினார் . எனவே இவரின் பெயரில் வரும் கஷியோ ( Kashio ) என்பதை சிறு மாற்றம் செய்து

கேசியோ ( CASIO ) என்ற பெயரினை இந்நிறுவனத்திற்கு பெயராக வைத்தனர்.



05.பிளாபங்க்ட்  ( BLAUPUNKT ) :








இந்நிறுவனமானது ஜெர்மனியின் பிரபலமான எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் முன்னனி நிறுவனம் . பிளாபங்க்ட்  ( BLAUPUNKT ) என்பது ஜெர்மன் மொழியில் நீல நிறப்புள்ளி அல்லது நீல நிற முனை என்ற பொருளை தருவதாகும். முதலில் இந்த நிறுவனத்துக்கு ஐடியல் (IDEAL) என்ற பெயரே வைக்கப்பட்டது . இங்கு ஆரம்பக்காலங்களில் ஹெட்போன்கள்  தயாரிக்கப்பட்டன . அவற்றின் தரத்தை சோதித்த பின்னர் விற்பனைக்கு   அனுப்பப்படும் முன்னர் அதில் நீல நிறப் அடையாளக் குறியிடப்படும். இவை வழக்கத்தில் சரியான தன்மையின் அடையாளமாக கருதப்பட்டதால் இவை நாளடைவில் இந்நிறுவனத்தின் டிரேட் மார்க்காக மாறியது. பின்னர் இந்நிறுவனத்தின் பெயராகவும் இதனை மாற்றி அமைத்தார்கள்.



06. எப்சன் (EPSON)






இந்நிறுவனம் பிரபலமான அச்சுப்பொறி (PRINTER) மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம்.இதன் பெயர் காரணம் சற்று வினோதமான  நிகழ்வாகும். இந்நிறுவனமானது 1942 -ம்  ஆண்டு  ஹிசாஓ யமஸகி  என்பவரால்  தைவா கோக்யோ (DAIWA KOGYO) என்ற பெயருடன் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் முதலில் நகனோ  என்ற இடத்தில் கடிகாரத்துக்கு தேவையான பாகங்களை தயாரித்து விற்பனை செய்தது. பின்னர் இதன் பெயர் 1968-ம் ஆண்டு ஷின்சு செய்கி என்ற பெயரினை பெற்றது.

பெயர் மாற்றம் செய்த அந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் முதல் மினி பிரிண்டர் தயாரித்து விற்பனைக்கு வந்தது. இந்த பிரிண்டரை E P 101(E P- Electronic Printer 101) என அழைக்கப்பட்டது. 1975-ம்  ஆண்டு இரண்டாவது பிரிண்டர்  புதிய வடிவமைப்புடன் தயாரித்து வெளியிடப்பட்டது.



இதனை முதலில் வெளியிடப்பட்ட பிரிண்டரின் மகன் (Son  of  EP -101) என அழைத்தனர். இதுவே பின்னர் Son of  EP  என அழைக்கப்பட்டது. இதனை மீண்டும் சிறு மாற்றம் செய்து " EPSON " என இந்நிறுவனத்தின் பெயரை அழைத்தனர்.



07.காம்பேக் (COMPAQ) :






இந்நிறுவனம் சிறந்த கணினி, மடிக் கணினி மற்றும் பல  எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்கள் சந்தையில் மிகவும் பிரபலமானவை. இந்நிறுவனம் USA -ல்  பிபரவரி -1982 ல்  தொடங்கப்பட்டது. அன்று முதல் பல கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பில்  வெற்றிகரமான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது .



இவை இணைவமைதியுடன் நல்ல திறனுடன் இயங்கும் என்பதினைக் குறிக்க ஆங்கிலத்தில் Compatibility and Quality  என அழைப்பார்கள். இந்நிறுவனம் இந்த இரண்டு சொல்லையும் இணைத்து CAMPAQ   என ஒரு புதிய சொல்லை உருவாக்கி தன நிறுவனத்திற்கு பெயராக வைத்தனர்.



08.சோனி (SONY)











இந்நிறுவனம் உலகபுகழ் பெற்ற எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம்.இவை தயாரிக்காத எலக்ட்ரானிக் பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தனது அனைத்து தயாரிப்புகளையும் சந்தையில் வெளியிட்டுள்ளது.  இதனை உருவாக்கியவர் ஜப்பானை சேர்ந்த திரு அக்யோ மொரிட்டா என்பவர். இவர் 1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்கா என்பவரின் உதவியுடன் “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். இன்நிறுவனமானது டேப் ரெக்கார்டர் தயாரிப்பில் சிறந்து விளங்கியது . இவரது கண்டுபிடிப்பான டேப் ரெக்கார்டர் அளவில் பெரியதாக இருந்தது. பின்னர் அமரிக்காவின் தொழில்நுட்ப உதவியுடன் கையடக்க டேப் ரெக்கார்டரை உருவாக்கினார். 
 
அதன் பின் தனது தயாரிப்பினை பிரபலப்படுத்த விரும்பி தனது நிறுவன பெயரை அனைவரிடமும் சென்றடையயும் வகையில் மாற்றி அமைக்க  விரும்பி இலத்தீன் மொழியில் உள்ள சோனஸ் என்ற பெயரையும் , அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும்  இணைத்து  தனது நிறுவன பெயரை 1958-ல்  " சோனி " (SONY) 
கார்ப்பரேஷன்  என்று பெயரை மாற்றினார். இதில்  சோனஸ் என்றால்  இலத்தீன் மொழியில்  "ஒலி" என்று பொருள். இப்பெயரானது இன்று உலக புகழுடன் வளம்  வந்துகொண்டிருக்கின்றது.
Stricktly No Rules
Read More
Welcome to our leading hacking community

Hi users I'm admin of this website You want beautiful site Don't worry about it.... Call Me +91 8870708594

கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks)

Posted by Unknown

 பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க 



சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.

பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.




பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது



01. START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்



02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்   H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.



03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.





II  அழிக்க முடியாத பைல்களை அழிக்க 



சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.



01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும் 



02. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt  



03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.



04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.



05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.







III  நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IP  ADDRESS  அறிய 



01 START கிளிக் செய்து



02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK 

     செய்யவும்.



03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்



04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)

      எடுத்துகாட்டாக : C:\>tracert www.arivu-kadal.in 
 
[அல்லது] 



01 START கிளிக் செய்து



02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK   

     செய்யவும்.



03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்



04 அதில் ping websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)









IV  Google - ன்  சில பயனுள்ள டிப்ஸ் 



01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க 



word +filetype:pdf



எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls  

உதாரணம் : Seven Wonders+filetype:pdf   



02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண



map : <city name>



உதாரணம் : map :chennai 



03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய



time: <Country name>



உதாரணம் : time:china 



04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய



weather :<city name>



உதாரணம் : weather : mumbai 



05. விமானத்தின் விவரம் அறிய



Airline Name <Flight Number>



உதாரணம் : Air India 605







 வேர்டில் (MS-WORD) சொற்களுக்கு கீழாக அன்டர்லைன்  செய்கையில்   

     சொற்களுக்கு இடையேயும் கோடு வருகிறதா?



நாம் ஒரு வார்த்தையின் கீழ் அன்டர்லைன் செய்ய " U " (Ctrl +U ) பயன்படுத்துவோம் . அதில் வார்த்தைகளுக்கு இடையேயும் அன்டர்லைன் வரும்.



எ . கா : அன்னையும் பிதாவும் 



இவ்வாறு இல்லாமல் சொற்களுக்கு இடையே கோடு வராமல் இருக்க



Ctrl + Shift  + W  அழுத்தினால் வார்த்தைகளுக்கு இடையே கோடுகள் வராது .



எ . கா : அன்னையும்  பிதாவும்
Stricktly No Rules
Read More

Download Windows 8.1 + Serial Key

Posted by Unknown

Microsoft has released new version of windows 8 called windows8.1 preview on Jun 26.You can Update or Download it From Microsoft official website.

Windows 8.1 includes enhancements in personalization, search, apps, windows store, cloud connectivity. Below I listed some of its features and minimum system requirements.

Windows 8.1 features
  • Start Button Returns
  • New Tile Sizes
  • New Apps
  • Revamped search
Windows 8.1 Minimum system Requirements
  • Processor : 1 GHz or faster
  • Ram: 1 GB (32-bit) or 2gb (62-bit)
  • Free hard disk space:16 GB (32-bit) or 20 GB (64-bit)
  • Graphics Card:MS DirectX9

Serial Key: NTTX3-RV7VB-T7X7F-WQYYY-9Y92F
Read More