ஆண்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட்போன்களின் இயக்கப் பயன்படும் இயங்குதளம். இது கூகிள் நிறுவனத்தாரின் தயாரிப்பு ஆகும்.
ஆண்ட்ராய்ட் பல்வேறு காலகட்டடங்களில் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பாக
கிடைத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு புதிய பதிப்பிலும் முந்தைய பதிப்பில்
உள்ள குறைகளை களைந்து மேலதிக வசதிகளைப் பெற்றிருக்கும்.
அந்த வகையில் புதிய ஆண்ட்ராய்ட் 4.4 கிட்-காட் இயங்குதளம் தற்பொழுது மொபைல்களில் பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது.
ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் சிறப்பு:
ஆண்ட்ராய்ட் 4.4. கிட்காட் பதிப்பின் முக்கியமான சிறப்பம்சமே மிகக்
குறைந்தளவு ரேம் (512 RAM) வசதி உள்ள ஸ்மார்ட் போன்களிலும் பயன்படுத்த
முடியும் என்பதே.
இதற்கு முன்பு வெளியான ஆண்ட்ராய்ட் பதிப்புகளைப் பொறுத்தவரை,
பயன்படுத்ததும் போன் புதியதாகவும், அதிக மெமரி வசதி கொண்டதாகவும் இருக்க
வேண்டும். ஆனால் இப்புதிய ஆண்ட்ராய்ட் கிட்காட் பதிப்பில் அவ்வாறில்லை.
அதனால் இப்புதிய பதிப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக
அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மிக குறைந்தளவு மெமரி கொண்ட போன்களிலும், சமீபத்தில் வெளியாகி பயனர்களை
கவர்ந்த ஸ்மார்ட் வாட்ச், கூகிள் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற உபகரணங்களிலும்
இப்பதிப்பைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் தகவல்கள்.
ஆண்ட்ராய்ட் 4.4. கிட்காட் - சிறப்பம்சங்கள்:
- ஓ.கே கூகிள் (OK Google): இந்த
வசதியின் மூலம் Google Voice Application -ஐ இயக்கமுடியும். OK Google
என்று சொன்னாலே போதும் இந்த அப்ளிகேஷன் செயல்பாட்டிற்கு கிடைக்கும். மொபைலை
தொடவேண்டிய அவசியமே இல்லை.
- ஸ்மார்ட் காலர் ஐடி (Smarter Caller ID): ஸ்மார்ட்
போனில் உள்ள கான்டாக்ட் லிஸ்டில் இல்லாத நம்பரிலிருந்து போன் அழைப்பு
ஏதாவது வந்தால், ஏற்கனவே அந்த எண் கூகிள் மேப்பில் இருப்பின் அதைப்பற்றிய
விபரங்களை காட்டும்.
- ஹேங்அவுட் அப்ளிகேஷன் (Hangout app): இந்த
வசதியின் மூலம் ஏற்கனவே கூகிள் ஹேங் அவுட், கூகிள் டாக் மூலம் உங்களுக்கு
நண்பர்கள் அனுப்பிய அரட்டை கச்சேரி SMS, MMSகளை ஆகியவற்றைப் பார்க்க
முடியும்.
- வீடியோ ரெகார்டர் (Video Recorder): இந்த
வசதியின் மூலம், மொபைல் ஸ்கிரீனை ரெக்கார்ட் செய்ய முடியும். மொபைலில்
நாம் மேற்கொள்ளும் செயல்களை அப்படியே வீடியோவாக பதிவுசெய்துகொள்ள முடியும்.
அதாவது கணினியில் Screen Recording செய்வது போல...
- உணர்வுவெளிப்படங்கள் (Emoticons): கோபம், சிரிப்பு, துயரம் என நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தப் பல்வேறு வகையான படங்களைப் பயன்படுத்தும் வசதி இது.
- மிக குறைந்த ரேம் (512 MB RAM): மேலே
சொன்னபடி மிக குறைந்த ரேம் வசதியில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மாடல்
ஸ்மார்ட்போனிலும் இதைப்பயன்படுத்த முடியும். இப்புதிய பதிப்பில்
ஆண்ட்ராய்ட் பின்னணியில் இயங்கும் பல்வேறு சேவைகளை நீக்கியிருப்பதால் இது
சாத்தியமாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான கூகிள் நெக்சஸ் 5 மொபைல், Google Nexus 4, Google Nexus
7, HTC One, Samsung Galaxy S4 போன்ற புதிய கிட்காட்டிற்கு முந்திய
ஆண்ட்ராய்ட் பதிப்பை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளட்களுக்கு
இப்புதிய பதிப்பை பயன்படுத்த முடியும். அதற்கான அறிவிப்பு வெகு விரைவில்
வெளிவரும்.
Stricktly No Rules
russell westbrook shoes
ReplyDeleteadidas tubular x
nike shox
jordan shoes
adidas stan smith men
adidas flux
moncler
nike epic react flyknit
kevin durant shoes
longchamp bags
xiaofang20191225